Enable Javscript for better performance
ரிலையன்ஸ் டிஃபன்ஸ்-அமெரிக்க கடற்படை வர்த்தக உடன்பாடு- Dinamani

சுடச்சுட

    

    ரிலையன்ஸ் டிஃபன்ஸ்-அமெரிக்க கடற்படை வர்த்தக உடன்பாடு

    By DIN  |   Published on : 14th February 2017 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போர்க் கப்பல்களில் பழுது நீக்கித் தருவது தொடர்பாக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் & என்ஜினியரிங் மற்றும் அமெரிக்க கடற்படை இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
    இதுகுறித்து ரிலையன்ஸ் டிஃபன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    அமெரிக்க போர்க் கப்பல்களை பழுது பார்ப்பது தொடர்பாக அமெரிக்க கடற்படை மற்றும் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
    குஜராத்தின் பிபவாவில் உள்ள ரிலையன்ஸ் கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்க கப்பல்களை பழுது நீக்குவது மற்றும் மறுவடிவமைப்பு செய்யும் பயணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    இந்த ஒப்பந்தத்தால் ரிலையன்ஸ் இன்ஃப்ரா கட்டுப்பாட்டில் உள்ள ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு மேலும் அதிகரிக்கும்.
    முன்னதாக சென்ற ஜனவரி மாதத்தில், ரிலையன்ஸ் கப்பல் கட்டும் தளத்தை ஆய்வு செய்த அமெரிக்க கடற்படை, அந்நிறுவனத்தின் திறனுக்கு அங்கீகாரம் வழங்கியதையடுத்து இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    அமெரிக்காவின் ஏழாவது கடற்படைப் பிரிவில் துணைக் கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையைச் சேர்ந்த 100 கப்பல்கள் இடம்பெற்றுள்ளன. மேற்கு பசிஃபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் இந்த படைப்பிரிவு தற்போது பராமரிப்பு பணிகளுக்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு செல்கின்றன.
    இந்த ஒப்பந்தத்தையடுத்து அந்தப் படைப்பிரிவு கப்பல்களின் பராமரிப்பு பணிகளை ரிலையன்ஸ் டிஃபன்ஸ் மேற்கொள்ள தற்போது வழி ஏற்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai