Enable Javscript for better performance
ஆதித்ய பிர்லா நூவோ வருவாய் 8% உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    aditya

    பன்முக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் 8 சதவீதம் அதிகரித்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனத்தின் வருவாய் ரூ.3,387.70 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,133.50 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 8.11 சதவீதம் அதிகமாகும்.
    ஐடியா தொலைத் தொடர்பு வர்த்தகத்தின் வாயிலாக கிடைத்த வருவாய் 4 சதவீதம் சரிவடைந்து ரூ.8,663 கோடியாக இருந்தது.
    மேலும், செலவினமும் ரூ.2,485.92 கோடியிலிருந்து 4.71 சதவீதம் உயர்ந்து ரூ.2,603.06 கோடியாக காணப்பட்டது.
    இதன் காரணமாக நிகர லாபம் ரூ.318.02 கோடியிலிருந்து 35.15 சதவீதம் குறைந்து ரூ.206.23 கோடியாக இருந்தது என்று ஆதித்ய பிர்லா நூவோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai