Enable Javscript for better performance
வேதாந்தா லாபம் ரூ.1,866 கோடி- Dinamani

சுடச்சுட

    
    vedanta

    எஃகு, தாமிரம் உள்ளிட்ட சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள வேதாந்தா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு லாபம் 4 மடங்கு அதிகரித்து ரூ.1,866.28 கோடி பெற்றதாக அறிவித்தது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    நடப்பு 2016-17 நிதி ஆண்டின் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் வேதாந்தா நிறுவனத்தின் வருவாய் ரூ.20,393.03 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.15,731.48 கோடியாக காணப்பட்டது. செலவினம் ரூ.14,216.38 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.16,033.75 கோடியாக காணப்பட்டது.
    இதையடுத்து, நிகர லாபம் ரூ408.58 கோடியிலிருந்து நான்கு மடங்கு உயர்ந்து ரூ.1,866.28 கோடியாக இருந்தது என்று வேதாந்தா நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பு, செலவினங்களில் கட்டுப்பாடு, உற்பத்தி பொருள்களின் விலை கணிசமாக அதிகரிப்பு போன்றவற்றால் லாபம் சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. நிதி நிலைமை மேம்பட்டு வருவதையடுத்து கடன் அளவு குறைந்து வருகிறது.
    மேலும், வேதாந்தா மற்றும் கெய்ர்ன் இந்தியா நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வேதாந்தா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாம் அல்பனீஸ் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai