Enable Javscript for better performance
ஜார்க்கண்டில் வேதாந்தா ரூ.6,600 கோடி முதலீடு- Dinamani

சுடச்சுட

    
    anilagarwal

    ஜார்க்கண்டில் தனது வர்த்தகத்தை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களில் ரூ.6,600 கோடியை (100 கோடி டாலர்) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக வேதாந்தா தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து வேதாந்தா ரிசோர்சஸ் குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்ததாவது:
    உலகம் எனும் கிரீடத்தில் வைரக்கல் போன்றது ஜார்க்கண்ட் மாநிலம். இந்த மாநிலத்தில் ஏராளமான இயற்கை வளங்கள் பொதிந்துள்ளன.
    இதனைக் கருத்தில் கொண்டே இம்மாநிலத்தில் 100 கோடி டாலரை (சுமார் ரூ.6,600 கோடி) பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய வேதாந்தா திட்டமிட்டுள்ளது.
    அதன் ஒரு பகுதியாக, இந்த மாநிலத்தில் 10 லட்சம் டன் உற்பத்தி திறன் கொண்ட உருக்கு ஆலை தொடங்கும் திட்டம் உள்ளது. இரண்டு ஆண்டுகளில் இந்த ஆலை உருவாக்கப்படும். அதற்கான இரும்புத் தாது வளம் கொண்ட பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
    மேலும், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள மனோகர்பூர் என்ற இடத்தில் ரூ.2,000 கோடி முதலீட்டில் பைப் தயாரிக்கும் ஆலை தொடங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
    வேதாந்தா முதலீட்டின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதுடன் அன்னியச் செலாவணியையும் பெருமளவில் சேமிக்கலாம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai