Enable Javscript for better performance
'செபி'யின் புதிய தலைவர் பதவிக் காலம் குறைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையத்தின் (செபி) புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட அஜய் தியாகியின் பதவிக் காலத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.
    இதுகுறித்து மத்திய அரசு தகவல்கள் தெரிவிப்பதாவது:
    செபி அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட அஜய் தியாகியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அவரின் பதவிக் காலம் மூன்றாண்டுகளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    எனினும், அஜய் தியாகின் பதவிக் குறைப்புக்கான காரணம் எதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
    செபி அமைப்பின் தற்போதைய தலைவராக யு.கே.சின்ஹா உள்ளார். இவரின் ஐந்தாண்டு பதவிக் காலம் வரும் மார்ச் 1-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இவருக்கு அடுத்து அந்தப் பதவியில் அஜய் தியாகியை நியமித்து மத்திய அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான அஜய் தியாகி ஹிமாசல பிரதேசத்தில் 1984-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியில் சேர்ந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai