Enable Javscript for better performance
பல்வேறு பொதுத் துறை வங்கிகளுக்கான 8 செயல் இயக்குநர்கள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு பொதுத் துறை வங்கிகளுக்கான 8 செயல் இயக்குநர்கள் நியமனம்

    By DIN  |   Published on : 18th February 2017 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு பொதுத் துறை வங்கிகளுக்கான 8 செயல் இயக்குநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. வினோத் ராய் தலைமையில் மத்திய அரசு உருவாக்கிய வங்கிகள் ஆலோசனைக் குழு வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:
    நீலம் தாமோதரன் மற்றும் அதனு குமார் தாஸ் ஆகியோர் பேங்க் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குநர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில், தாமோதரன் பேங்க் ஆஃப் பரோடாவின் பொது மேலாளராகவும், குமார் தாஸ் விஜயா வங்கியின் பொது மேலாளராகவும் உள்ளனர்.
    இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பொது மேலாளராகப் பணியாற்றி வரும் கே. சுவாமிநாதன் அதே வங்கிக்கு செயல் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.
    அசோக் குமார் பிரதான், யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குநராகிறார். அவர் தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் வங்கியில் தலைமைப் பொது மேலாளராக உள்ளார்.
    பி. ரமண மூர்த்தி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது அலாகாபாத் வங்கியின் பொது மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
    மேலும், கார்ப்பரேஷன் வங்கியின் பொது மேலாளர் பரீத் அகமது கான் பஞ்சாப் & சிந்து வங்கியின் செயல் இயக்குநராகவும், எம்.கே. பட்டாச்சார்யா மற்றும் எஸ் ஹரிசங்கர் ஆகியோர் முறையே இந்தியன் வங்கி மற்றும் அலாகாபாத் வங்கியின் செயல் இயக்குநராகவும் நியமிக்கப்படுகின்றனர்.
    பட்டாச்சார்யா மற்றும் ஹரிசங்கர் தற்போது முறையே ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் வங்கியின் தலைமை பொது மேலாளர் பொறுப்பில் உள்ளனர்.
    தற்போது நியமிக்கப்பட்டுள்ள எட்டு செயல் இயக்குநர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதனிடையே டி.சி. ரங்கநாதன் மற்றும் சுனில் மேத்தா ஆகியோர் முறையே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் அலுவல் சாரா இயக்குநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனத்துக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியதையடுத்து, பணியாளர்கள் அமைச்சகம் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.
    சுனில் மேத்தா புதிய பொறுப்பை ஏற்கும் முன்பாக பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாகக் குழுவிலிருந்து அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai