Enable Javscript for better performance
5 மாதங்களில் காணாத வகையில் பங்குச் சந்தைகளில் ஏற்றம்- Dinamani

சுடச்சுட

    

    5 மாதங்களில் காணாத வகையில் பங்குச் சந்தைகளில் ஏற்றம்

    By DIN  |   Published on : 18th February 2017 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sensex

    இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் 5 மாதங்களில் காணா வகையில் ஏற்றம் கண்டன.
    உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு தாற்காலிகமாக சிறிய தொய்வு ஏற்பட்டுள்ள போதிலும் இனி வரும் காலங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்தார். பங்கு முதலீட்டாளர்களுக்கு அவரின் இந்த அறிவிப்பு புதிய உற்சாகத்தை கொடுத்தது.
    மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விலக்கி கொள்வதாக அறிவித்ததும் பங்கு வர்த்தகத்துக்கு வலு சேர்த்தது.
    இதையடுத்து, மருந்து துறை பங்குகளின் விலை அதிகபட்சமாக 1.64% ஏற்றம் கண்டது. இதையடுத்து, எண்ணெய்-எரிவாயு 1.38%, நிதி 1.24%, வங்கி 1.21%, எரிசக்தி 1.07% துறை பங்குகளும் கணிசமான ஏற்றத்தைக் கண்டன.
    நிறுவனங்களைப் பொருத்தவரையில், எச்.டி.எப்.சி. வங்கி 3.75 சதவீதமும், சிப்லா 1.58 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.53 சதவீதமும் அதிகரித்தன.
    அதேசமயம், டி.சி.எஸ். பங்கின் விலை 1.58 சதவீதமும், ஹீரோ மோட்டோகார்ப் 1.29 சதவீதமும், இன்ஃபோசிஸ் 1.21 சதவீதமும் இறக்கத்தை சந்தித்தன.
    மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 167 புள்ளிகள் அதிகரித்து 28,468 புள்ளிகளாக நிலைத்தது. கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு பிறகு காணப்படும் அதிகபட்ச அளவாகும் இது.
    தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 43 புள்ளிகள் உயர்ந்து 8,821 புள்ளிகளாக நிலைத்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai