Enable Javscript for better performance
4 வாரங்களாக ஏறுமுகத்தில் பங்குச் சந்தை- Dinamani

சுடச்சுட

    
    bse

    இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4 வாரங்களாக ஏற்றம் கண்டன.
    வாரத்தின் தொடக்கத்தில் மந்தமாக காணப்பட்ட பங்கு வர்த்தகம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவு வெளியீடுகளால் விறுவிறுப்பை காணத் தொடங்கின.
    குறிப்பாக, மோட்டார் வாகனம், மருந்துத் துறை நிறுவனங்களின் நிதி நிலை அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அமைந்தன.
    நாட்டின் சில்லறைப் பணவீக்கம் குறைந்துள்ளதாக வெளியான செய்தியும் பங்கு வர்த்தகத்துக்கு மேலும் வலு சேர்த்தது.
    அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை அடுத்த மாதம் உயர்த்த உள்ளதாக வெளியான தகவலையடுத்து பங்குச் சந்தைகளின் வளர்ச்சி வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
    வருகிற 20-ஆம் தேதி நடைபெறவுள்ள நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் முன்வைக்கப்பட உள்ளதாக டி.சி.எஸ். நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை சராசரியாக 1.06 சதவீதம் ஏற்றம் கண்டன.
    இதையடுத்து, தொழில்நுட்பம் 1.37 சதவீதம், மருந்து 1.25 சதவீதம், வங்கி 1.15, எண்ணெய்-எரிவாயு 0.69 சதவீதம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை சந்தித்தன.
    முதலீட்டாளர்களிடையே தேவை குறைந்து போனதையடுத்து ரியல் எஸ்டேட் (3.08%), மோட்டார் வாகனம் (2.76%), பொறியியல் பொருள்கள் (1.21%), நுகர்வோர் சாதனங்கள் (1.06%), நுகர் பொருள்கள் (0.93%) உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை இறக்கம் கண்டன.
    சென்செக்ஸில் உள்ள 30 நிறுவனங்களுள் 14 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தும், 16 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தும் காணப்பட்டன.
    நிறுவனங்களைப் பொருத்தவரையில், இன்ஃபோசிஸ் பங்கின் விலை 4.53 சதவீதமும், கெயில் 4.08 சதவீதமும், ரிலையன்ஸ் 3.36 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 3 சதவீதமும், விப்ரோ 2.91 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.36 சதவீதமும் அதிகரித்தன.
    அதேசமயம், டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை அதிகபட்ச அளவாக 12.47 சதவீதம் இறக்கத்தை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, அதானி போர்ட்ஸ் 4.18%, ஹீரோ மோட்டோகார்ப் 4.11%, ஐ.டி.சி. 2.33%, ஏஷியன் பெயிண்ட்ஸ் 2.31%, எஸ்.பி.ஐ. 2.12%, எல் & டி 2.05%, கோல் இந்தியா 2%, லூபின் 1.67% சரிந்தன.
    மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 134 புள்ளிகள் அதிகரித்து 28,468 புள்ளிகளாக நிலைத்தது.
    மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.15,972.96 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
    தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் நிஃப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 8,821 புள்ளிகளாக நிலைத்தது. இப்பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,19,348.64 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai