Enable Javscript for better performance
பொதுப் பங்கு வெளியீட்டுக்கு 22 வாரங்களில் அனுமதி!- Dinamani

சுடச்சுட

    
    market

    பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு வெளியீட்டுக்கு 22 வாரங்களில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    லாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வாரங்களில், பொதுப் பங்கு வெளியீட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை (டி.ஐ.பி.ஏ.எம்.) வெளியிட்டுள்ளது.
    அதன்படி, அதிக சொத்து மதிப்பைக் கொண்ட, கடன் தொல்லை இல்லாத, மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள 25 சதவீத பங்குகளை பங்குச் சந்தையில் பட்டியலிடலாம் என்று அந்த வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு பங்கு வெளியீட்டின் போதும் ஆலோசனை வழங்க டி.ஐ.பி.ஏ.எம். செயலர் தலைமையில் அமைச்சரவை குழு அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    இதையடுத்து, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அனுமதி கிடைத்தவுடன் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு ஐந்தரை மாதங்களுக்குள் மத்திய அரசு அனுமதி அளிக்க உள்ளது. கடந்த 2014-15 நிதி ஆண்டு நிலவரப்படி மத்திய அரசுக்கு சொந்தமான 157 நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வருகின்றன. இதில், 45 நிறுவனங்கள் மட்டுமே தற்போது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
    அதிக லாபம் ஈட்டும், ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா, மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம், ஓ.என்.ஜி.சி. விதேஷ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இன்னும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாமல் உள்ளன.
    சிறிய, பெரிய என்ற வேறுபாடு இன்றி பொதுத் துறை நிறுவனங்களைப் பட்டியலிடுவதால் அவற்றின் செயல்பாடுகளைப் பொதுமக்கள் ஆராய்ந்து பார்க்க வழிவகை ஏற்படுவதோடு வெளிப்படைத் தன்மையும் அதிகரிக்கும். இதனால், அந்த நிறுவனங்கள் சந்தையில் போட்டியை எதிர்கொண்டு சிறப்பாகச் செயல்படும் என்று டி.ஐ.பி.ஏ.எம். செயலர் நீரஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
    தற்போதுள்ள சூழ்நிலையில், 50 பொதுத் துறை நிறுவனங்கள் வரை பட்டியலிடப்படலாம் என்று தெரிகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai