Enable Javscript for better performance
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்: புதிய மருத்துவக் காப்பீடு அறிமுகம்- Dinamani

சுடச்சுட

    

    நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்: புதிய மருத்துவக் காப்பீடு அறிமுகம்

    By DIN  |   Published on : 21st February 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    newindia

    அரசு காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் பிரீமியர் மெடிக்ளெய்ம் என்ற புதிய மருத்துவக் காப்பீட்டை திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
    சென்னையில் அந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி.ஸ்ரீநிவாசன் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பிரீமியர் மெடிக்ளெய்ம்' என்ற புதிய மருத்துவக் காப்பீட்டை தனி நபர் அல்லது குடும்பத்தினர் எடுத்துப் பயன் அடையலாம். குறைந்தபட்சம்
    ரூ.15 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.1 கோடி வரையில் மருத்துவக் காப்பீடு செய்யலாம்;
    18 வயது முதல் 65 வயது வரை உள்ளோர் இந்த மருத்துவக் காப்பீட்டை எடுத்துப் பயன் பெறலாம். 3 மாத குழந்தை முதல் 18 வயதுக்குட்பட்டோர் பெற்றோருடன் இணைந்தும், புதிதாக பிறந்த குழந்தை - தாய் இணைந்து இந்தப் புதிய மருத்துவக் காப்பீட்டை எடுத்துப் பயன் பெறலாம். தனி நபராகவும், குடும்ப காப்பீட்டில் அதிகபட்சமாக 6 நபர்களும் காப்பீட்டுத் திட்டத்தில் இணையலாம்.
    ரூ.15 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை காப்பீட்டுத் தொகை உள்ள இரு வகை திட்டங்கள் உள்ளன என்றார் அவர்.
    இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர் மற்றும் விமான செலவுகள் ரூ.1 லட்சம் வரை), ரூ. 1 லட்சம் வரை மகப்பேறு உதவித் தொகை, எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மன நோய் சிகிச்சை, உடல் பருமன் சிகிச்சை, மேலும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை ("ஆயுஷ்') சிகிச்சைக்கு காப்பீடு ஆகியவையும் இந்தப் புதிய மருத்துக் காப்பீட்டின் சிறப்பு அம்சங்களாகும். தற்போது 14 சதவீத பாலிசிகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 300 மைக்ரோ அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன. அத்துடன், 70,000 புதிய ஏஜெண்டுகள் நியமிக்கப்பட உள்ளனர் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai