Enable Javscript for better performance
ரயில்வேக்கு சொந்தமான 3 பொதுத் துறை நிறுவனங்களை பட்டியலிட ஆயத்தம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில்வேக்கு சொந்தமான 3 பொதுத் துறை நிறுவனங்களை பட்டியலிட ஆயத்தம்

    By DIN  |   Published on : 21st February 2017 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே துறைக்கு சொந்தமான மூன்று பொதுத் துறை நிறுவனங்களை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கான நடைமுறைகளை மத்திய நிதி அமைச்சகம் திங்கள்கிழமை தொடங்கியது.
    வரும் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மூன்று வாரங்களுக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்டது. அதில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத் துறை நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளதாக அறிவித்தார். இதனால், நிறுவனத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், அதனுடைய உண்மையான மதிப்பும் தெரிய வரும் என்றார்.
    அந்த வகையில், ரயில்வே துறைக்கு சொந்தமான ஐ.ஆர்.சி.டி.சி., ஐ.ஆர்.எப்.சி., இர்கான் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் மத்திய அரசு தற்போது 100 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது.
    இதில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை பொதுப் பங்கு வெளியீடு மூலம் பங்குச் சந்தையில் விற்பனை செய்து நிதி திரட்ட நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதற்கான நடைமுறைகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
    மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூ.72,500 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
    அதன்படி, பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள சிறுபான்மை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.46,500 கோடியும், பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.11,000 கோடியும் திரட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai