Enable Javscript for better performance
ரூ.16,000 கோடி மதிப்பில் டி.சி.எஸ். பங்குகளை திரும்பப் பெற முடிவு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.16,000 கோடி மதிப்பில் டி.சி.எஸ். பங்குகளை திரும்பப் பெற முடிவு

    By DIN  |   Published on : 21st February 2017 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tcs

    இந்தியாவின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) 2.85 சதவீத அளவுப் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு அதன் நிர்வாகக் குழு திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
    டி.சி.எஸ். நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், 5.61 கோடி பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பங்கு ஒன்றின் விலை ரூ.2,850 என்ற அடிப்படையில் ரூ.16,000 கோடி மதிப்பிலான பங்குகள் திரும்பப் பெறப்பட உள்ளன. மொத்த பங்கு மூலதனத்தில் இது 2.85 சதவீதமாகும் என்று டி.சி.எஸ். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    பங்குச் சந்தை வழிமுறையைப் பயன்படுத்தி பங்குதாரர் நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட விகிதாசாரத்தில் ஒப்பந்தக் கேட்பு அடிப்படையில் பங்குகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதாக டி.சி.எஸ். மேலும் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai