தங்கம் பவுனுக்கு ரூ.72 அதிகரிப்பு
By DIN | Published on : 23rd February 2017 04:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் பவுனுக்கு ரூ.72 அதிகரித்து, புதன்கிழமை ரூ.22,624-க்கு விற்பனையானது.
இந்திய ரூபாய் மீதான மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டக் காரணங்களால் தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன.
புதன்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்து, ரூ.2,828-க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.335 அதிகரித்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.43,420-க்கு விற்பனையானது.