Enable Javscript for better performance
சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனம் - ஓரியன்டல் வங்கி உடன்படிக்கை- Dinamani

சுடச்சுட

    

    சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனம் - ஓரியன்டல் வங்கி உடன்படிக்கை

    By DIN  |   Published on : 25th February 2017 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cholamandalam

    சோழமண்டலம் எம்.எஸ். பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் காப்பீட்டுத் திட்டங்களை நிறுவன முகவராக விற்பனை செய்வது தொடர்பாக பொதுத் துறையைச் சேர்ந்த ஓரியன்டல் வர்த்தக வங்கியுடன் உடன்படிக்கை கையெழுத்தானது.
    இது குறித்து சோழமண்டலம் எம்.எஸ். பொதுக் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஆயுள் காப்பீடு அல்லாத பல்வேறு வகையான பொதுக் காப்பீட்டுத் திட்டங்களை ஓரியன்டல் வர்த்தக வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் வாகன காப்பீடு, மருத்துவக் காப்பீடு, பயணக் காப்பீடு அடங்கும். அவை தவிர, தனி நபருக்கு அல்லாத காப்பீட்டுத் திட்டங்களான தீ, பொறியியல் துறைக் காப்பீடு உள்ளிட்டவற்றை விற்பனை செய்யவும் உடன்படிக்கை ஏற்பட்டது என்று அந்தச் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai