Enable Javscript for better performance
டாக்சி சேவை தொடங்கும் திட்டம் இல்லை: ரிலையன்ஸ்- Dinamani

சுடச்சுட

    
    Relianc

    டாக்சி சேவை தொடங்கும் திட்டம் எதுவும் தங்கள் நிறுவனத்துக்கு இல்லை என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் திட்டவட்டமாக கூறியது.
    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செயலி அடிப்படையிலான டாக்சி சேவையில் ஈடுபடப் போவதாக கடந்த பல மாதங்களாக கூறப்பட்டு வந்தது. இந்த செய்தியை மறுக்கவோ உறுதி செய்யவோ ரிலையன்ஸ் முற்படவில்லை. இந்த நிலையில், இது தொடர்பாக இணையதள இதழ் ஒன்று அண்மையில் வெளியிட்ட செய்தியில், ரிலையன்ஸ் 600 புதிய கார்களை வாங்கியதாகத் தெரிவித்திருந்தது. டாக்சி சேவையில் ரிலையன்ஸ் ஈடுபடுவது உறுதியாகிவிட்டதையே இது காட்டுவதாக உள்ளது என்று அந்த இணையதள இதழ் குறிப்பிட்டது.
    இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சனிக்கிழமை மறுப்பு செய்தி வெளியிட்டிருக்கிறது. டுவிட்டர் சமூக வலைதளத்தில் அந்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ கணக்கில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    ரிலையன்ஸ் நிறுவனம் டாக்சி சேவை தொடங்கவிருப்பதாக வெளியான செய்தி தவறானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதனை முற்றிலும் மறுக்கிறது. நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகளுடன் தொடர்பில்லாத பிற வணிக நடவடிக்கைகளில் விரிவாக்கம் செய்யும் உத்தேசம் இல்லை என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.
    முன்னதாக, டாக்சி சேவை அளித்து வரும் ஊபர் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தியதாக அறிவித்தது. ஊபர் டாக்சி சேவையைப் பயன்படுத்துவோர், ரிலையன்ஸ் ஜியோவின் "ஜியோ மணி' ப்ரீபெய்டு வாலெட் மூலம் சவாரிக் கட்டணத்தைச் செலுத்துவது தொடர்பாக அந்த உடன்படிக்கை ஏற்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai