Enable Javscript for better performance
ரூ.2,000 கோடி பிரீமியம் திரட்ட இந்தியா ஃபர்ஸ்ட் இலக்கு- Dinamani

சுடச்சுட

    
    visaka

    ஆர்.எம்.விசாகா

    இந்தியா ஃபர்ஸ்ட் ஆயுள் காப்பீடு நிறுவனம் நடப்பு நிதி ஆண்டில் பிரீமியம் வருவாயாக ரூ. 2,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான ஆர்.எம்.விசாகா தெரிவித்தார்.
    மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
    நிறுவனம் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமான பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. பரோடா வங்கி, ஆந்திரா வங்கி மூலமாக பாலிசிகளை விற்பனை செய்து வருகிறோம். நாடெங்கும் உள்ள பரோடா வங்கியின் 70% கிளைகள் மூலமாகவும், ஆந்திரா வங்கியின் 90% கிளைகள் மூலமாகவும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியா ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்குப் பிரத்யேகமாக 29 கிளைகள் உள்ளன. ஆண்டு விகிதத்தில் நிறுவனத்தின் தனி நபர் பிரீமியம் பிரிவு வருவாய் 90 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. நிதி ஆண்டு நிறைவில் இப்பிரிவின் வருவாய் ரூ. 350 கோடியாக இருக்கும். நடப்பு நிதி ஆண்டில் மொத்த பிரீமியம் வருவாயாக ரூ. 2,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம். விரைவில் ஆன்லைன் வழி பாலிசி விற்பனை தொடங்கும் என்றார் அவர்.
    அந்த நிறுவனத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கிக்கு 44%, ஆந்திர வங்கிக்கு 30%, பிரிட்டனின் லீகல் அண்ட் ஜெனரல் நிதி நிறுவனத்துக்கு 26% பங்கு உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai