Enable Javscript for better performance
ரூ.23 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை- Dinamani

சுடச்சுட

    
    gold2

    ஆபரணத் தங்கத்தின் விலை பவுன் ரூ.23 ஆயிரத்தை நெருங்குகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றம், பங்குச் சந்தையில் வீழ்ச்சி உள்ளிட்டவற்றால் தங்கம், வெள்ளியின் விலை ஒரு சில நாள்களாக அதிகரித்து விற்பனையாகிறது. இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
    சனிக்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 அதிகரித்து, ரூ.22,904-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படமால், ஒரு கிராம் வெள்ளி ரூ.47-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.43,910-க்கும் விற்பனையானது.


    சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்):

    ஒரு கிராம் தங்கம் 2,863
    ஒரு பவுன் தங்கம் 22,904
    ஒரு கிராம் வெள்ளி 47.00
    ஒரு கிலோ வெள்ளி 43,910

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai