Enable Javscript for better performance
வணிக வங்கிகளாக மாறிய ரிசர்வ் வங்கிகள்!- Dinamani

சுடச்சுட

    
    sbi

    நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்.பி.ஐ.) ஐந்து துணை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய அமைப்பில் எஸ்.பி.ஐ. மாபெரும் வங்கியாக வரும் ஏப்.1 முதல் செயல்படத் தொடங்கும்.
    இணைக்கப்பட உள்ள 5 துணை வங்கிகளுக்குமே உள்ள சிறப்பம்சம் - அவை இந்திய சுதந்திர காலத்துக்கு முன்னர் இருந்த பல்வேறு சமஸ்தான அரசுகளின் மத்திய (ரிசர்வ்) வங்கியாக இருந்தவை என்பதுதான்! அவை அந்தந்த சமஸ்தானங்களின் கரன்சிகளை வெளியிட்டு வந்தன.
    பாட்டியாலா ஸ்டேட் வங்கியானது பாட்டியாலா சமஸ்தான அரசர் பூபிந்தர் சிங்கால் 1917-இல் தொடங்கப்பட்டது.
    பாங்க் ஆஃப் மைசூர், 1913-இல் அப்போதைய மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையாரால் தொடங்கப்பட்டது.
    பாங்க் ஆஃப் ஜெய்ப்பூர், பாங்க் ஆஃப் பிகானீர் ஆகிய இரண்டு வங்கிகளும் 1943-இல் தொடங்கப்பட்டவை.
    ஹைதராபாத் ஸ்டேட் வங்கியானது ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத்தின் ரிசர்வ் வங்கியாக 1941-இல் தொடங்கப்பட்டது.
    ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், 1945-இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மத்திய வங்கியாக, அதன் திவான் சர் சி.பி.ராமஸ்வாமி ஐயரால் தொடங்கப்பட்டது
    இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு சமஸ்தானங்கள் இணைக்கப்பட்டபோது, சமஸ்தானங்களின் ரிசர்வ் வங்கிகளாக இருந்தவை இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைக்கப்படவில்லை. அந்த வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டு, வணிக வங்கிகளாக செயல்படத் தொடங்கின.
    துணை வங்கிகள் இணைப்புக்குப் பிறகு, உலகின் மிகப் பெரிய
    50 வங்கிகளின் பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கி இடம் பெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai