ரூ.500 கோடி முதலீட்டில் சுஸுகி புதிய ஆலை 

இந்தியாவில் ரூ.500 கோடியில் புதிய ஆலை அமைக்க பரிசீலித்து வருவதாக சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.500 கோடி முதலீட்டில் சுஸுகி புதிய ஆலை 

இந்தியாவில் ரூ.500 கோடியில் புதிய ஆலை அமைக்க பரிசீலித்து வருவதாக சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுஸுகி நிறுவனத்தின் 155சிசி திறன் கொண்ட புதிய 'இன்ட்ரூடர்' பைக் புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. அதன் விலை ரூ.98,340 ஆக (தில்லி விற்பனையக விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஸுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சடோஷி உசிதா பேசியதாவது:
வரும் 2020 க்குள் ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஹரியாணா மாநிலம் குருகிராமத்தில் தற்போது நிறுவனத்துக்கு சொந்தமாக உள்ள ஆலையிலிருந்து 10 லட்சம் பைக்குகள் வரையே தயாரிக்க முடியும். அதற்கும் மேல் தேவை அதிகரிக்கும் நிலையில் ரூ.500 கோடியில் புதிய ஆலையை அமைக்க பரிசீலித்து வருகிறோம். இதற்கான இறுதி முடிவை அடுத்த ஆண்டு அறிவிப்போம்.
சுஸுகி நிறுவனத்துக்கு தென்னிந்திய சந்தை மிகப்பெரியது. எனவே, அங்கு ஆலையை அமைப்பது என்பது நல்ல வாய்ப்பாக இருக்கும். இருப்பினும், செயல்பாட்டு அளவில் பார்க்கும்போது தற்போதுள்ள ஆலைக்கு அருகிலேயே புதிய ஆலையை அமைப்பதும் மற்றொரு விருப்பமாக உள்ளது. இதன் மூலம், ஆலை நிர்வாகத்தை எளிதாக கையாள முடியும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com