கார் விற்பனையில் மந்த நிலை

பண்டிகை கால விற்பனை மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. தேவையில் விறுவிறுப்பு ஏற்படாததால் கடந்த அக்டோபரில் கார் விற்பனை 5.32 சதவீதம் குறைந்துள்ளது.
கார் விற்பனையில் மந்த நிலை

பண்டிகை கால விற்பனை மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. தேவையில் விறுவிறுப்பு ஏற்படாததால் கடந்த அக்டோபரில் கார் விற்பனை 5.32 சதவீதம் குறைந்துள்ளது.
 இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
 பண்டிகை காலத்தில் விற்பனை குறைந்துள்ளது என்பது உண்மையான சந்தை நிலவரத்தை பிரதிபலிப்பதாக அமையாது. இது, தாற்காலிகமாக காணப்படும் மந்த நிலையே.
 சென்ற அக்டோபரில் 1,84,666 கார்கள் விற்பனையாகின. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 1,95,036 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 5.32 சதவீதம் குறைவாகும். பயணிகள் வாகன விற்பனை 2,80,677 லிருந்து சற்று குறைந்து 2,79,837 ஆனது.
 இருசக்கர வாகன விற்பனை 2.76 சதவீதம் குறைந்து 17,50,966 ஆகவும், மோட்டார் சைக்கிள் விற்பனை 3.50 சதவீதம் சரிந்து 11,04,498 ஆகவும் காணப்பட்டது. ஸ்கூட்டர் விற்பனை 5,71,431 லிருந்து 0.53 சதவீதம் குறைந்து 5,68,410 ஆக இருந்தது.
 கார், மோட்டார் சைக்கிள் விற்பனை சரிவைக் கண்டுள்ள நிலையில் அதற்கு மாறாக அக்டோபரில் வர்த்தக வாகனங்கள் விற்பனை 6.44 சதவீதம் (69,793 வாகனங்கள்) அதிகரித்தது.
 அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வாகன விற்பனை 22,01,489 என்ற எண்ணிக்கையிலிருந்து 1.79 சதவீதம் குறைந்து 21,62,164 இருந்தது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com