சுடச்சுட

  

  கார் விற்பனையில் மாருதி சுஸுகி ஆல்டோ மீண்டும் முதலிடம்!

  By  புது தில்லி,  |   Published on : 21st November 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  alto

  இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பயணிகள் வாகனங்களுக்கான பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ மீண்டும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
   இதுகுறித்து இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது: ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்திலிருந்த டிசையர் அக்டோபரில் சறுக்கலை சந்தித்து இரண்டாம் இடத்தை பிடித்தது. அந்த மாதத்தில் டிசையர் விற்பனை 17,447 ஆக இருந்த நிலையில், ஆல்டோ காரின் விற்பனை 19,447ஆனது. இதையடுத்து, ஆல்டோ கார் முதலிடத்தை மீண்டும் தனதாக்கிக் கொண்டது.
   அக்டோபரில் அதிகம் விற்பனையான டாப் 10 பட்டியலில் 7 கார்கள் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்தவை. எஞ்சிய மூன்று மாடல்கள் ஹுண்டாய் மோட்டார் இந்தியா தயாரிப்பாகும். ஆல்டோ, டிசையர் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பிடித்துவிட, பலேனோ 14,532 விற்பனை பங்களிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஹுண்டாயின் கிராண்ட் ஐ10 (14,417 கார்கள்) நான்காவது இடத்தையும், வேகன் ஆர் (13,043) ஐந்தாவது இடத்தையும், செலிரியோ (12,209) ஆறாவது இடத்தையும், ஸ்விஃப்ட் (12,057) ஏழாவது இடத்தையும், விடாரா ப்ரெஸ்ஸா (11,684) எட்டாவது இடத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டன. ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை முறையே ஹுண்டாயின் எலைட் ஐ20 (11,012 கார்கள்), கிரெட்டா (9,248) ஆகிய மாடல்கள் தக்கவைத்துக் கொண்டதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai