சுடச்சுட

  
  trymp

  டிரையம்ப் நிறுவனம் நடப்பு ஆண்டில் 1,300 பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 
  வாகன வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் நடுத்தர வகை மோட்டார் சைக்கிள்களை விநியோகித்தல் ஆகியவற்றில் பங்குதரராக இணைந்துள்ள டிரையம் மற்றும் பஜாஜ் நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூட்டாக அறிவித்தன. இந்த கூட்டணியில் உருவாகும் முதல் பைக் வரும் 2021-ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  'இந்தியா பைக் வீக்-2017' கோவாவில் இன்று தொடங்கவுள்ள நிலையில் டிரையம்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விமல் சம்ப்ளி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 
  நடப்பு ஆண்டில் டிரையம்ப் 1,300 பைக்குகளை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து விற்பனை வளர்ச்சி 10-15 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  கடந்த 2013ஆம் ஆண்டில் இந்தியாவில் டிரையம்ப் நிறுவன மோட்டார் சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், விற்பனை 2014-ஆம் ஆண்டிலிருந்துதான் தொடங்கியது. அதிலிருந்து, இதுவரையில், நிறுவனம் 4,500 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. 
  நிறுவனத்தின் ராக்கெட் 3, டேடொனா 200, சூப்பர் ஸ்போர்ட்ஸ் டேடொனா 675ஆர், டைகர் 800 ஆகிய பைக்குகளுக்கு இந்திய வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து டிரையம்ப் பிராண்ட் பெயரில் 250-700சிசி திறன் கொண்ட பிரிமீயம் வகை பைக்குகளை குறைந்த விலையில் தயாரித்து வழங்குவதையே முக்கிய இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai