7 மாதங்களில் 20 லட்சம் ஹோண்டா ஆக்டிவா விற்பனை

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் பிரபல மாடலான ஆக்டிவா 7 மாதங்களில் 20 லட்சம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
7 மாதங்களில் 20 லட்சம் ஹோண்டா ஆக்டிவா விற்பனை

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் பிரபல மாடலான ஆக்டிவா 7 மாதங்களில் 20 லட்சம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) யத்வீந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களில் ஆக்டிவா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளின் சாலைகளை ஆக்டிவா அதிக அளவில் ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. இதன் பயனாக, இந்தியாவில் ஆக்டிவாவின் விற்பனை தொடர்ந்து சிறப்பான அளவில் வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.
இதனை மெய்ப்பிக்கும் வகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் ஆக்டிவாவின் விற்பனை 20,40,134 என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் 102சிசி திறன் கொண்ட ஆக்டிவா ஸ்கூட்டரை கடந்த 2001-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. முதல் ஆண்டில் 55,000 மட்டுமே விற்பனையான அவ்வகை ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மிக குறுகிய காலத்தில் அதாவது டிசம்பர் 2005இல் 10 லட்சத்தை தாண்டி சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com