சுடச்சுட

  
  yamaha

  இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் 'எம்டி-09' என்ற புதிய வகை சூப்பர் பைக்கை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
  இதுகுறித்து அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) ராய் குரியன் தெரிவித்ததாவது: யமஹாவின் அதி நவீன தொழில்நுட்பத்தில் 'எம்டி-09' சூப்பர் பைக் உருவாக்கப்பட்டுள்ளது. தனித்துவமான தயாரிப்புகளை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எங்களின் லட்சியத்துக்கு இந்த புதிய வகை சூப்பர் பைக் உறுதுணையாக இருக்கும்.
  600 சிசிக்கும் அதிகமான திறன் கொண்ட பைக்குகளை விரும்பும் இளையதலைமுறையினரை இலக்காக கொண்டு இந்த புதிய தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'எம்டி-09' புதிய வகை சூப்பர் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட என்ஜின் 847 சிசி திறன், 3 சிலிண்டர்களைக் கொண்டது. பாதுகாப்பான ஆன்டி-லக் பிரேக்கிங் சிஸ்டம் தொழில்நுட்பம் இதில் உள்ளது. இப்புதிய பைக்கின் விலை ரூ.10.88 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  இந்த மாடல் பைக்குகள் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai