சுடச்சுட

    

    ட்ரையம்ப் நிறுவனம்: புதிய மோட்டார் சைக்கிள் அறிமுகம்

    By DIN  |   Published on : 17th October 2017 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    two-wheeler

    உயர் வகை மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வரும் டிரையம்ப் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட 'ஸ்ட்ரீட் டிரிப்பிள் ஆர்எஸ்' என்ற புதிய பைக்கை திங்கள்கிழமை புதுதில்லியில் அறிமுகம் செய்தது.
    இதுகுறித்து டிரையம்ப் மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விமல் சம்ப்ளி தெரிவித்ததாவது:
    டிரையம்ப் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 'ஸ்ட்ரீட் டிரிப்பிள் ஆர்எஸ்' என்ற புதிய ரக மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 765-சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.10.55 லட்சமாகும். 
    வேகம், நேர்த்தியான வடிவமைப்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இப்புதிய பைக் ஒரு வரப்பிரசாதமாகும்.
    பிரீமியம் வகை மோட்டார் சைக்கிள் விற்பனையில் நிறுவனம் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இந்திய சந்தை எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே, புதிய மாடல் பைக்குகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தவுள்ளோம். மேலும், முகவர்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக, நடப்பு காலாண்டில் கோவா, மங்களூரு, குருகிராம் ஆகிய மூன்று நகரங்களில் புதிதாக முகவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதையடுத்து, நிறுவனத்துக்கான முகவர்களின் எண்ணிக்கை 17-ஆக அதிகரிக்கும்.
    ஜூலை-செப்டம்பர் காலாண்டில் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் விற்பனை 27 சதவீதம் அதிகரித்தது. அதேசமயம், 500சிசி மற்றும் அதற்கும் அதிகமான திறன் கொண்ட பிரிமியம் பிரிவு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 23 சதவீதம் சரிவை சந்தித்தது. மானேசர் ஆலையில் வாகன உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai