Enable Javscript for better performance
அந்நியச் செலாவணி திருப்திகரம்: டிபிஎஸ்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவில் திருப்திகரமாக உள்ளது என சர்வதேச நிதிச் சேவை நிறுவனமான டிபிஎஸ் தெரிவித்துள்ளது. 
    இதுகுறித்து அந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 27,500 கோடி டாலர் (சுமார் ரூ.18.15 லட்சம் கோடி) என்ற அளவில் மிக மோசமான நிலையில் இருந்தது.
    வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிகமான அளவில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளதுடன், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் நடப்பு ஆண்டு செப்டம்பரில் 40,250 கோடி டாலர் (சுமார் ரூ.26.56 லட்சம் கோடி) என்ற சாதனை அளவைத் தொட்டுள்ளது. உலக அளவில் ஏற்படும் எதிர்பாராத சவால்களை சமாளிக்க இந்த தொகை இந்தியாவுக்குப் போதுமானதாகும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai