ஜூலை மாத வாகன விற்பனை நிலவரம்

ஜூலை மாத வாகன விற்பனை நிலவரம்
ஜூலை மாத வாகன விற்பனை நிலவரம்


மாருதி சுஸுகி
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா சென்ற ஜூலை மாதத்தில் 1,64,369 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த ஆண்டில் இதே மாத கால அளவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையான 1,65,346 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவானதாகும்.
உள்நாட்டில் வாகன விற்பனை 1,54,001 என்ற எண்ணிக்கையிலிருந்து சற்று உயர்ந்து 1,54,150-ஆக காணப்பட்டது.
குறைந்த விலை கார்களான ஆல்டோ மற்றும் வேகன்ஆர் விற்பனை 10.9 சதவீதம் குறைந்து 37,710-ஆக இருந்தது. அதேசமயம், ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் விற்பனை 17.8 சதவீதம் அதிகரித்து 74,373-ஆக காணப்பட்டது.
சென்ற ஜூலையில் கார்கள் ஏற்றுமதி 11,345-லிருந்து 9.9 சதவீதம் சரிந்து 10,219-ஆக இருந்தது என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் 18 சதவீதம்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஜூலை மாதத்தில் 3,21,179 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 
கடந்த ஆண்டு இதே கால அளவு விற்பனையான 2,71,171 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 18 சதவீதம் அதிகமாகும்.
இருசக்கர வாகன விற்பனை 2,63,336-லிருந்து 17 சதவீதம் உயர்ந்து 3,07,856-ஆனது. உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை 13 சதவீதம் உயர்ந்து 2,47,382-ஆக காணப்பட்டது. வாகன ஏற்றுமதி 50,957 என்ற எண்ணிக்கையிலிருந்து 42 சதவீதம் அதிகரித்து 72, 242-ஆனது என டிவிஎஸ் மோட்டார் தெரிவித்துள்ளது.

அசோக் லேலண்ட் 27 சதவீதம்
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற ஜூலையில் 15,199 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 
கடந்த ஆண்டின் இதே கால அளவு விற்பனையான 11,981 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகமாகும்.
நடுத்தர, கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 22 சதவீதம் அதிகரித்து 10,996-ஆகவும், இலகுரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 42 சதவீதம் வளர்ச்சி கண்டு 4,203-ஆகவும் இருந்தது என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
 


ஹோண்டா மோட்டார் சைக்கிள்
நாட்டின் இரண்டாவது பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ஜூலையில் 5,48,577 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 
கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 5,44,529 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 0.73 சதவீதம் அதிகமாகும். வாகன ஏற்றுமதி 32,569-லிருந்து 40,162-ஆக உயர்ந்துள்ளது.
நிறுவனம் 2001-இல் செயல்பாட்டை தொடங்கியது. அதிலிருந்து சென்ற ஜூலையில் தான் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3.8 கோடி என்ற மைல்கல்லை கடந்துள்ளது. நடப்பாண்டில் முதல் நான்கு மாதங்களில் மட்டும் உள்நாட்டில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com