3 மாதங்களில் 30,000 அமேஸ் கார்கள் விற்பனை
By DIN | Published on : 22nd August 2018 01:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (ஹெச்சிஐஎல்) நிறுவனத்தின் தயாரிப்புகளான அமேஸ் ரகக் கார்களின் விற்பனை, மூன்றே மாதங்களில் 30,000-ஐத் தாண்டியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹெச்சிஐஎல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹோண்டா அமஸ் ரகக் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட முன்று மாதங்களில், இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட அந்த ரகக் கார்கள் விற்பனையாகியுள்ளன. எங்கள் நிறுவனத்தின் 20 ஆண்டுகால வரலாற்றில், இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரே ரகத்தைச் சேர்ந்த இத்தனை கார்கள் விற்பனையாகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.