டி.வி.எஸ். புதிய மோட்டார் சைக்கிள் "ரேடியன்' அறிமுகம்

டி.வி.எஸ். நிறுவனம் புதிதாக ரேடியன் என்னும் 110 சிசி மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
டி.வி.எஸ். புதிய மோட்டார் சைக்கிள் "ரேடியன்' அறிமுகம்

டி.வி.எஸ். நிறுவனம் புதிதாக ரேடியன் என்னும் 110 சிசி மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.
 சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய மோட்டார் சைக்கிளை டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் சுதர்சன் வேணு, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் இயக்குநர் கே.என். ராதாகிருஷ்ணன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
 இந்த மோட்டார் சைக்கிளில் உறுதியான உலோக கட்டமைப்பு, நவீன ஸ்டைல், மேம்பட்ட வசதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது தவிர, ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.
 மேலும், இதில் 109.7 சிசி டியூரா லைஃப் என்ஜின் உள்ளதால், அதிக ஆற்றல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. தில்லியில் இதன் ஷோரூம் விலை ரூ.48,400 ஆகும்.
 இது தொடர்பாக டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநர் சுதர்சன் வேணு கூறியது: இந்திய இளைஞர்களைக் கவரும் விதத்தில், நவீன வசதிகள் இந்த மோட்டார் சைக்கிளில் உள்ளது. இதன் விலையும் நடுத்தர மக்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் இருக்கும். முதல் ஆண்டில் 2 லட்சம் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்க உள்ளோம் என்றார். டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் இயக்குநர் கே.என்.ராதாகிருஷ்ணன் கூறியது: முற்போக்கு சிந்தனையாளர்களை இலக்கு வைத்து இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தி உள்ளோம். ரேடியன் பிரிவில் வெவ்வேறு வகை மோட்டார் சைக்கிள்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக ரூ.60 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com