அசோக் லேலண்ட் விற்பனை 9% சரிவு

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நவம்பர் மாத வாகன விற்பனை 9 சதவீதம் சரிந்தது.
அசோக் லேலண்ட் விற்பனை 9% சரிவு


ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நவம்பர் மாத வாகன விற்பனை 9 சதவீதம் சரிந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை செபி-யிடம் தெரிவித்துள்ளதாவது:
அசோக் லேலண்ட் நவம்பர் மாதத்தில் 13,121 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டில் இதே கால அளவு விற்பனையான 14,457 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் குறைவாகும்.
நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 10,638-லிருந்து 18 சதவீதம் குறைந்து 8,718-ஆகியுள்ளது.
அதேசமயம், இலகு ரக வாகனங்களின் விற்பனை 15 சதவீதம் அதிகரித்து 4,403-ஆக காணப்பட்டது என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com