சுடச்சுட

  

  எக்ஸ்-பிளேடின் ஏபிஎஸ் ரகம்: அறிமுகப்படுத்தியது ஹோண்டா

  By DIN  |   Published on : 11th December 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  xblade


  ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்டு ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) நிறுவனம், தனது புகழ் பெற்ற மாடலான எக்ஸ்-பிளேடு மோட்டார் சைக்கிளின் ஆன்ட்டி லாக் பிரேக் வசதி (ஏபிஎஸ்) கொண்ட புதிய ரகத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  வேகமாகச் செல்லும் வாகனங்களை நிறுத்தும்போது, சக்கரம் சிக்கிக் கொண்டு வாகனம் சறுக்காமல் இருப்பதற்கான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட பிரேக் அமைப்புகள் ஏபிஎஸ் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
  இதன் மூலம், வாகனங்களின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  தில்லியில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்ச்சியின்போது, ஏபிஎஸ் வசதி கொண்ட எக்ஸ்-பிளேடு மோட்டார் சைக்கிளை ஹெச்எம்எஸ்ஐ நிறுவனம் அறிமுகப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai