சுடச்சுட

  
  cars

  இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கார் விற்பனை, முந்தைய ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 3.43 சதவீதம் குறைந்துள்ளது.
  இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளர்களின் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  இந்தியச் சந்தையில் கடந்த நவம்பர் மாதம் 1,79,783 கார்கள் விற்பனையாகின. முந்தைய 2017-ஆம் ஆண்டின் நவம்பர் மாத கார் விற்பனையான 1,82,435 கார்களோடு ஒப்பிடுகையில் இது 3.43 சதவீதம் குறைவாகும்.
  எனினும், மோட்டார் சைக்கிள்களின் விற்பனையைப் பொருத்தவரை, கடந்த நவம்பர் மாதம் அது 9.36 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.
  2017-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 9,59,860-ஆக இருந்த மோட்டார் சைக்கிள்களின் விற்பனை, கடந்த நவம்பர் மாதம் 10,49,659-ஆக உயர்ந்துள்ளது.
  ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இரு சக்கர வாகனங்களின் விற்பனையும், கடந்த நவம்பர் மாதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. அந்த மாதத்தில் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 16,45,791 ஆகும். கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் விற்பனையான 15,36,015 இரு சக்கர வாகனங்களோடு ஒப்பிடுகையில், இது 7.15 சதவீதம் அதிகம் என அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai