சுடச்சுட

  
  renault


  இந்தியாவில் தனது கார்களின் விலைகளை 1.5 சதவீதம் வரை உயர்த்த ரெனோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
  இதுகுறித்து ரெனோ இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எங்களது கார்களின் விலைகளை, 1.5 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
  உதிரி பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளதாலும், ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாலும் நிறுவனத்தின் உற்பத்திச் செலவு அதிகமாகி வருகிறது.
  அதனை ஈடு செய்வதற்காகவே கார்களின் விலைகள் அதிகரிக்கப்படுகின்றன.
  வரும் ஜனவரி மாதம் முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று அந்த அறிக்கையில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
  ஏற்கெனவே, மாருதி சுஸுகி, ஸ்கோடா, இசுஸு, டொயோட்டா கிர்லோஸ்கர் போன்ற நிறுவனங்களும் தங்களது கார்களின் விலைகளை ஜனவரி மாதம் முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது நினைவுகூரத் தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai