சுடச்சுட

  

  மேம்படுத்தப்பட்ட புதிய பிளாட்டினா பைக்: பஜாஜ் ஆட்டோ அறிமுகம்

  By DIN  |   Published on : 18th December 2018 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nw-platina


  மேம்படுத்தப்பட்ட புதிய வகை பிளாட்டினா பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் திங்கள்கிழமை அறிமுகம் செய்தது.
  இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் (மோட்டார்சைக்கிள் வர்த்தகம்) எரிக் வாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
  110சிசி பிரிவில் கூடுதல் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட புதிய பிளாட்டினா பைக் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 100 இஎஸ் பிளாட்டினா பைக்குகளை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த மாற்றாக இருக்கும்.
  ஆன்டி-ஸ்கிட் பிரேகிங் அமைப்பு, டியூப்லெஸ் டயர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறம்பம்சங்கள் இப்புதிய பிளாட்டினாவில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.49,197-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என எரிக் வாஸ் அந்த அறிக்கையில்தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai