சுடச்சுட

  

  விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் டாடா மோட்டார்ஸ் தீவிரம்

  By DIN  |   Published on : 23rd December 2018 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பயணிகள் வாகனங்களுக்கான விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
  இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: தீவிர நெட்வொர்க் விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரே நாளில் ராஜஸ்தானில் மட்டும் 6 பயணிகள் வாகன விநியோகஸ்தர்களை டாடா மோட்டார்ஸ் நியமித்துள்ளது. இதில், மூன்று விநியோகஸ்தர்கள் ஜெய்பூரிலும், உதய்பூர், பீகானிர், கங்காநகர் பகுதிகளில் தலா ஒரு விநியோகஸ்தரும் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனைக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  இப்புதிய விநியோகஸ்தர்களின் நியமனத்தையடுத்து நாடு முழுவதும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்குள்ள மொத்த முகவர்களின் எண்ணிக்கை 325-ஐ எட்டியுள்ளது. ராஜஸ்தானில் 34 முகவர்கள் உள்ளனர் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai