கோதுமை பயிரிடும் பரப்பில் மந்த நிலை

நடப்பு ரபி பருவத்தில் கோதுமை பயிரிடும் பரப்பளவில் மந்த நிலை காணப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோதுமை பயிரிடும் பரப்பில் மந்த நிலை


நடப்பு ரபி பருவத்தில் கோதுமை பயிரிடும் பரப்பளவில் மந்த நிலை காணப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:நடப்பு 2018-19 ஆண்டின் ரபி பருவத்தில் இதுவரையில் கோதுமை பயிரிடப்பட்டுள்ள பரப்பளவு 253.52 லட்சம் ஹெக்டேராக உள்ளது. கடந்தாண்டு இதே பருவத்தில் இதன் சாகுபடி பரப்பு 257.47 லட்சம் ஹெக்டேராக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது கோதுமை பயிரிடும் பரப்பு தற்போது பின்னடைவைக் கண்டுள்ளது.
கோதுமை தவிர, ரபி பருவத்தின் முக்கிய பயிர்களான நெல், பருப்பு, உணவு தானியங்கள், எண்ணெய் வித்துகள் சாகுபடியிலும் மந்த நிலையே நிலவி வருகிறது.
ரபி பருவத்தில் இதுவரையில் கோதுமை பயிரிடும் பரப்பு உத்தர பிரதேசத்தில் 84.08 லட்சம் ஹெக்டேராகவும், மத்திய பிரதேசத்தில் 47.94 லட்சம் ஹெக்டேராகவும், பஞ்சாபில் 34.69 லட்சம் ஹெக்டேராகவும், ஹரியானாவில் 24.04 லட்சம் ஹெக்டேராகவும் மற்றும் ராஜஸ்தானில் 24.61 லட்சம் ஹெக்டேராகவும் உள்ளது.
கடந்தாண்டு ரபி பருவத்தில் பருப்பு வகைகளின் சாகுபடி 143.40 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில் தற்போது 136.25 லட்சம் ஹெக்டேராக சுருங்கியுள்ளது. எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பும் 72.94 லட்சம் ஹெக்டேரிலிருந்து குறைந்து 72.53 லட்சம் ஹெக்டேராகியுள்ளது. 
முக்கிய உணவு தானியங்களின் ரபி பருவ சாகுபடி பரப்பும் 48.72 லட்சம் ஹெக்டேரிலிருந்து 40.26 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. 
கடந்தாண்டைக் காட்டிலும் நெல் சாகுபடி பரப்பளவும் 14.58 லட்சம் ஹெக்டேரிலிருந்து சரிந்து 9.98 லட்சம் ஹெக்டேராகியுள்ளது.
ரபி பயிர் பருவத்தில் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பு 537.12 லட்சம் ஹெக்டேரிலிருந்து 512.53 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளதாக வேளாண் அமைச்சகம் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com