ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் தன்னாட்சி அதிகாரத்தை பாதுகாக்க வேண்டும்: ரங்கராஜன்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ் தர்மத்தை கடைபிடித்து தன்னாட்சி
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் தன்னாட்சி அதிகாரத்தை பாதுகாக்க வேண்டும்: ரங்கராஜன்

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ் தர்மத்தை கடைபிடித்து தன்னாட்சி அதிகாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது:
ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அதிகாரிகள் ஆளுநராக நியமிக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு தில்லியில் பணியாற்றிய பல உயரதிகாரிகள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளனர்.
நம்மைப் பொருத்தவரை, ஒரு முறை புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டால் தார்மீக அடிப்படையில் பணியாற்றி ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை பாதுகாக்க வேண்டும். அதில் சமரசத்துக்கு இடமில்லை.
அதேபோலத்தான் நானும், டி.சுப்பாராவ் போன்றவர்களும் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது தர்மத்தை கடைபிடித்து ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை போற்றி பாதுகாத்துள்ளோம்.
அதேசமயம், அரசுடன் இணைந்து சக்தி காந்த தாஸ் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை தியாகம் செய்யாமல் ரிசர்வ் வங்கி மற்றும் அரசின் பொறுப்புகளை சிறப்பான முறையில் புரிந்து கொண்டு சக்திகாந்த தாஸ் பணியாற்றுவார் என்று ரங்கராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com