Enable Javscript for better performance
கிரேட்டர் நொய்டாவில் தொடங்கியது ஆட்டோ எக்ஸ்போ 2018- Dinamani

சுடச்சுட

    
    autoexpo

    இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் "ஆட்டோ எக்ஸ்போ' வாகனக் கண்காண்ட்சி உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வியாழக்கிழமை தொடங்கியது.
    வரும் புதன்கிழமை வரை நடைபெறவிருக்கும் இந்தக் கண்காட்சியில், டிவிஎஸ், மாருதி சுஸýகி, அசோக் லேலண்டு உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன.
    கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியைவிட இந்த முறை அதிக நிறுவனங்கள், அதிக தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பெட்ரோலிய எரிபொருள்களில் இயங்கும் வாகனங்கள் எதிர்காலத்தில் அரசால் தடை செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில், மின்சாரம் மற்றும் மாற்று எரிபொருள் வாகனங்களுக்கு இந்தக் கண்காட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.
    இந்தக் கண்காட்சியில் சுமார் 24 புதிய வாகனங்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும், புதிதாக உருவாக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai