மாருதி சுஸுகி வாகன உற்பத்தி 2 கோடியை தாண்டி சாதனை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் உள்நாட்டில் 2 கோடி கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது வேறு எந்த நிறுவனமும் செய்யாத சாதனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி வாகன உற்பத்தி 2 கோடியை தாண்டி சாதனை

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் உள்நாட்டில் 2 கோடி கார்களை தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது வேறு எந்த நிறுவனமும் செய்யாத சாதனை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கெனிச்சி அயூகவா தெரிவித்துள்ளதாவது:
மாருதி சுஸுகி நிறுவனம் மானேசர் மற்றும் குருகிராமம் ஆலைகளின் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளது. கடந்த 1983 டிசம்பரில் வாகன உற்பத்தி தொடங்கப்பட்டு 34 ஆண்டுகள் 6 மாதங்கள் கழித்து 2 கோடி என்ற இமாலய இலக்கு எட்டப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி மொத்தம் தயாரித்த 2 கோடி வாகனங்களில், 1.44 கோடி வாகனங்கள் குருகிராமத்திலும், 56 லட்சம் வாகனங்கள் மானேசர் ஆலையிலும் உற்பத்தி செய்யப்பட்டவை என்றார் அவர்.
மாருதி சுஸுகி நிறுவனம் 10 லட்சம் வாகன உற்பத்தியை கடந்த 1994 மார்ச் மாதத்தில் எட்டியது. அதன்பிறகு அந்நிறுவனம் வாகன உற்பத்தியில் 50 லட்சம் என்ற மைல்கல்லை 2005 ஏப்ரலிலும், 1 கோடி என்ற மைல்கல்லை 2011 மார்ச்சிலும் கடந்தது.
மாருதி சுஸுகி தற்போது உள்நாட்டில் 16 வகையான கார்களை உற்பத்தி செய்து வருகிறது. அவை, ஐரோப்பா, ஜப்பான், ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com