மாருதி சுஸுகி நிகர லாபம் ரூ.1,975 கோடி

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி முதல் காலாண்டில் ரூ.1,975.3 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
மாருதி சுஸுகி நிகர லாபம் ரூ.1,975 கோடி

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி முதல் காலாண்டில் ரூ.1,975.3 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.21,810.7 கோடியாக இருந்தது. இதற்கு, முந்தைய நிதி ஆண்டில் இதே கால அளவில் வருவாய் ரூ.19,374.1 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் ரூ.1,556.4 கோடியிலிருந்து 26.91 சதவீதம் உயர்ந்து ரூ.1,975.3 கோடியானது.
சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மாருதி சுஸுகி 4,90,479 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்தாண்டு விற்பனையான 3,94,571 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 24.3 சதவீதம் அதிகம் என மாருதி சுஸுகி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com