Enable Javscript for better performance
ஆந்திரத்தில் ரூ.1,600 கோடியில் புதிய ஆலை: பணிகளை தொடங்கியது ஹீரோ மோட்டோகார்ப்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்தில் ரூ.1,600 கோடியில் புதிய ஆலை: பணிகளை தொடங்கியது ஹீரோ மோட்டோகார்ப்

    By  புது தில்லி  |   Published on : 24th March 2018 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    HERO

    ஆந்திர மாநிலம் சித்தூரில் ரூ.1,600 கோடியில் புதிய ஆலை அமைக்கும் பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
     இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் (படம்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
     சித்துôரில் அமைக்கப்படும் இந்த ஆலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு எட்டாவது உற்பத்தி ஆலை ஆகும். இதில் 18 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் வகையில் மூன்று கட்டங்களாக பணிகள் நிறைவேற்றப்படும்.
     இந்த ஆலை முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் நிலையில், நிறுவனத்தின் மொத்த மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு திறன் ஆண்டுக்கு 1.10 கோடியாக அதிகரிக்கும். வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வாகனங்கள் என்ற உற்பத்தி இலக்கை கடக்க தீவிரமாக செயலாற்றி வருகிறோம்.
     ஆந்திரத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய ஆலையை அமைப்பதன் மூலம் நேரடியாக 2,000 பேருக்கும், மறைமுகமாக 10,000 பேருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். அதன் மூலம், மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சி சிறப்பான அளவில் முன்னேற்றம் காணும்.
     இப்புதிய ஆலையில் தயாரிக்கப்படும் வாகனங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai