Enable Javscript for better performance
சென்செக்ஸ் 409 புள்ளிகள் வீழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    உலக அளவில் வர்த்தக போர் உருவாகும் சூழல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 409 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
     அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவித்துள்ளார். இது, சர்வதேச நாடுகளிடையே வர்த்தக போருக்கு வழி வகுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
     முதலீட்டாளர்கள் இதனை கருத்தில் கொண்டு லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இதையடுத்து, நடப்பு ஆண்டில் முதல் முறையாக நிஃப்டி 10,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
     மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 409 புள்ளிகள் சரிந்து ஐந்து மாதங்களில் காணப்படாத அளவில் 32,596 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 116 புள்ளிகள் குறைந்து 9,998 புள்ளிகளாக நிலைத்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு சந்தை மதிப்பில் ரூ.157 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai