Enable Javscript for better performance
டாஃபே நிறுவனத்துக்கு சர்வதேச தயாரிப்பு தலைமை விருது- Dinamani

சுடச்சுட

    

    டாஃபே நிறுவனத்துக்கு சர்வதேச தயாரிப்பு தலைமை விருது  

    By  சென்னை  |   Published on : 24th March 2018 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    TAFE

    டாஃபே என்று சுருக்கமாக அழைக்கப்படும் டிராக்டர்ஸ் அண்டு ஃபார்ம் எக்கியூப்மெண்ட் நிறுவனம் 2018-ஆம் ஆண்டுக்கான ப்ராஸ்ட் & சுல்லிவனின் சர்வதேச தயாரிப்பு தலைமை விருதை முதல் முறையாக வென்றுள்ளது.
     இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தது:
     நடப்பு ஆண்டுக்கான ப்ராஸ்ட் & சுல்லிவனின் சர்வதேச தயாரிப்பு தலைமைக்கான மூன்று விருதுகளை டாஃபே நிறுவனம் வென்றுள்ளது. ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப தலைமைப் பிரிவில் இந்த விருதை பெறும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமை டாஃபே-க்கு கிடைத்துள்ளது. நிறுவனத்தின் எதிர்கால தனித்துவ தயாரிப்புகளுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக இதனை கருதுகிறோம் என டாஃபே அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
     அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள விழாவில், ப்ராஸ்ட் & சுல்லிவனின் சர்வதேச தயாரிப்பு தலைமை விருது டாஃபே நிறுவனத்துக்கு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai