Enable Javscript for better performance
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117.5 கோடியாக சரிவு- Dinamani

சுடச்சுட

    

    தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117.5 கோடியாக சரிவு

    By  புது தில்லி  |   Published on : 24th March 2018 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    JIO

    நாட்டின் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்தில் 117.5 கோடியாக சரிவடைந்தது என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
     இதுகுறித்து அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
     கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 119.06 கோடியாக இருந்தது. இந்த எண்ணிக்கை சென்ற ஜனவரியில் 1.32 சதவீதம் சரிவடைந்து 117.5 கோடியாக குறைந்து போனது.
     குறிப்பாக, செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 116.74 கோடியிலிருந்து 1.33 சதவீதம் குறைந்து 115.19 கோடியானது.
     சென்ற ஜனவரியில் பல பெரிய நிறுவனங்கள் 1.26 கோடி வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்துக் கொண்டுள்ளன. அதில், 83 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்து ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, பார்தி ஏர்டெல் புதிதாக 15 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடாஃபோன் 12.82 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஐடியா செல்லுலார் 11.44 லட்சம் வாடிக்கையாளர்களையும், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 3.96 லட்சம் வாடிக்கையாளர்களையும் சேர்த்துக் கொண்டுள்ளன.
     கடந்த டிசம்பரில் ஆர்காம் நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை நிறுத்தப்பட்டதையடுத்து அந்த நிறுவனம் ஜனவரியில் 2.1 கோடி வாடிக்கையாளர்களை இழந்தது. அதேபோன்று கடனில் மூழ்கி திவால் நோட்டீஸ் கொடுத்த ஏர்செல் நிறுவனம் 34 லட்சம் வாடிக்கையாளர்களையும், டாடா டெலிசர்வீசஸ் 19 லட்சம் வாடிக்கையாளர்களையும், டெலிநார் 16 லட்சம் வாடிக்கையாளர்களையும், பொதுத் துறையைச் சேர்ந்த எம்டிஎன்எல் 10,634 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
     கடந்த ஆண்டு டிசம்பரில் 2.32 கோடியாக இருந்த லேண்ட்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு ஜனவரியில் 2.3 கோடியாகி உள்ளது.
     பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சேவையிலிருந்து 1.15 லட்சம் வாடிக்கையாளர்கள் விலகியுள்ளனர். இந்நிறுவனத்தைத் தொடர்ந்து ஆர்காம் நிறுவனம் 41,720 லேண்ட்லைன் வாடிக்கையாளர்களையும், எம்டிஎன்எல் 10,907 வாடிக்கையாளர்களையும், குவாட்ரண்ட் 2,765 வாடிக்கையாளர்களையும், ஏர்செல் 2,219 வாடிக்கையாளர்களையும், டாடா டெலிசர்வீசஸ் 797 லேண்ட்லைன் வாடிக்கையளர்களையும் இழந்துள்ளன. அதேசமயம், பார்தி ஏர்டெல் நிறுவனம் 5,925 புதிய லேண்ட்லைன் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது.
     மேலும், சென்ற ஜனவரியில் அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) சேவை சந்தாதாரர்களின் எண்ணிக்கை 36.28 கோடியிலிருந்து 4.2 சதவீதம் அதிகரித்து 37.81 கோடியானது.
     நடப்பு ஆண்டு ஜனவரி மாத இறுதி நிலவரப்படி பிராட்பேண்ட் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ (16.83 கோடி), பார்தி ஏர்டெல் (7.5 கோடி), வோடஃபோன் (5.48 கோடி), ஐடியா (3.73 கோடி), பிஎஸ்என்எல் (2.18 கோடி) ஆகிய ஐந்து நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 94.52 சதவீத அளவுக்கு உள்ளது என டிராய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai