Enable Javscript for better performance
ஆதார் அடிப்படையில் வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்க்க ஏர்டெல் நிறுவனத்துக்கு மீண்டும் அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    ஆதார் அடிப்படையில் வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்க்க ஏர்டெல் நிறுவனத்துக்கு மீண்டும் அனுமதி

    By DIN  |   Published on : 31st March 2018 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    airtel

    பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆதார் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் விவரங்களை சரிபார்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. 
    இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
    தொலைத்தொடர்பு சேவை அளித்து வரும் ஏர்டெல் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களின் விவரங்களை ஆதார் அடிப்படையில் சரிபார்க்க குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எடுத்துள்ளது. இது தொடர்பாக மேலும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை, நிபந்தனைகளை பின்பற்றுவது குறித்து காலாண்டுக்கு ஒரு முறை ஏர்டெல் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுபோன்ற அறிக்கைகளை சரிபார்க்கும் பணிகளை ஆணையம் அல்லது ஆணையத்தின் சார்பில் நியமிக்கப்படும் தணிக்கையாளர் மேற்கொள்வார். 
    ஏர்டெல் நிறுவனம் மீதான இந்த தடை விலக்கப்பட்ட போதிலும், ஏர்டெல் பேமண்ட் வங்கி ஆதார் அடிப்படையில் வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்க்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கும். அதனை நீக்குவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    இந்த அறிவிப்பு தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
    ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே ஏர்டெல் பேமண்ட் வங்கியில் சேமிப்பு கணக்குகளை ஆரம்பித்து, சமையல் எரிவாயு மானியம் பல கோடி ரூபாயை அதில் வரவு வைத்ததாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. 
    இதையடுத்து, யுஐடிஏஐ அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி, ஏர்டெல் நிறுவனம் மற்றும் ஏர்டெல் பேமண்ட் வங்கி ஆகியவை ஆதார் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் விவரங்களை சரிபார்க்க தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai