Enable Javscript for better performance
கோல் இந்தியா நிலக்கரி உற்பத்தி இலக்கு 18.41 கோடி டன்- Dinamani

சுடச்சுட

    
    coal

    கோல் இந்தியா நிறுவனம் நடப்பு காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 18.41 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் கோபால் சிங் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதி ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் 17.63 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டது. இந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டின் இதே கால அளவில் நிலக்கரி உற்பத்தியை 4.4 சதவீதம் அதிகரித்து 18.41 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு முழு நிதி ஆண்டில் நிலக்கரி உற்பத்தி 56.80 கோடி டன்னாக இருக்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 2.5 சதவீதம் அதிகம்.
    தேவையில் காணப்பட்ட சுணக்கத்தையடுத்து முதல் காலாண்டில் நிலக்கரி உற்பத்தி பின்னடைவைச் சந்தித்தது. இரண்டாவது காலாண்டில் அதன் உற்பத்தி 8.3 சதவீதம் உயர்ந்து 11.30 கோடி டன்னாகவும், மூன்றாவது காலாண்டில் 2.9 சதவீதம் அதிகரித்து 15.20 கோடி டன்னாகவும் காணப்பட்டது.
    உள்நாட்டைப் பொருத்தவரையில் நிலக்கரிக்கு பற்றாக்குறை இல்லை. ஒவ்வொருவரின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai