Enable Javscript for better performance
ஃபிளிப்கார்ட் இந்தியாவின் இழப்பு பாதியாக குறைந்தது- Dinamani

சுடச்சுட

    
    flipcart

    ஃபிளிப்கார்ட் இந்தியா நிறுவனத்தின் இழப்பு கடந்த 2016-17 நிதி ஆண்டில் பாதியாக குறைந்து ரூ.244.7 கோடியாகியுள்ளது. 
    நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்திடம் ஃபிளிப்கார்ட் வழங்கியுள்ள ஆவணங்களில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    2015-16 நிதி ஆண்டில் ரூ.13,177.4 கோடியாக இருந்த ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2016-17 நிதி ஆண்டில் 18 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.15,569.2 கோடியாகி உள்ளது. 
    இதன் காரணமாக, நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.544.5 கோடியிலிருந்து பாதியளவு குறைந்து ரூ.244.7 கோடியாகி உள்ளது. பணியாளர் நலனுக்கான செலவினமும் ரூ.245.4 கோடியிலிருந்து சரிந்து ரூ.166.6 கோடியாகியுள்ளது.
    நிறுவனம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவதால் இயக்குநர்கள் குழு சென்ற 2016-17 நிதி ஆண்டுக்கு பங்குதாரர்களுக்கு ஈவுத் தொகை எதுவும் பரிந்துரைக்கவில்லை என ஃபிளிப்கார்ட் அந்த ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai