Enable Javscript for better performance
ஐடிசி லாபம் ரூ.2,932 கோடியாக உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    itc

    பல்வேறுபட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஐடிசி குழுமம் சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ரூ.2,932.71 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
    இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவித்துள்ளதாவது:
    ஐடிசி நிறுவனத்தின் விற்பனை ஜனவரி முதல் மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில் ரூ.10,705.75 கோடியாக இருந்தது. 2016-17 நிதி ஆண்டின் இதே கால அளவில் வருவாய் ரூ.14,882.75 கோடியாக காணப்பட்டது.
    செலவினம் ரூ.11,363.78 கோடியிலிருந்து வெகுவாக குறைந்து ரூ.6,996.46 கோடியானது. இதையடுத்து நிகர லாபம் ரூ.2,669.47 கோடியிலிருந்து 9.86 சதவீதம் உயர்ந்து ரூ.2,932.71 கோடியானது.
    சென்ற முழு நிதி ஆண்டில் நிகர வருவாய் ரூ.58,287.95 கோடியிலிருந்து குறைந்து ரூ.47,362.51 கோடியாகவும், நிகர லாபம் 9.68 சதவீதம் அதிகரித்து ரூ.11,485.10 கோடியாகவும் இருந்தன.
    சென்ற 2017-18 நிதி ஆண்டுக்கு ரூ.1 முகமதிப்பைக் கொண்ட சாதாரண பங்கு ஒன்றுக்கு ரூ.5.15 ஈவுத்தொகை வழங்க இயக்குநர்கள் குழு பரிந்துரைத்துள்ளதாக ஐடிசி தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai