Enable Javscript for better performance
சென்செக்ஸ் 238 புள்ளிகள் வீழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 238 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.
    கர்நாடக மாநிலத்தில் நீடித்து வரும் அரசியல் குழப்பம் காரணமாக பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடக்கம் முதலே மந்தமாகவே காணப்பட்டது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 80 டாலரை நெருங்கியுள்ளதால் இறக்குமதி செலவினம் அதிகரித்து இந்தியாவின் நிதி பற்றாக்குறை மோசமடையும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்தது. மேலும், பல நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லாதது உள்ளிட்டவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின.
    வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் துறை பங்குகள் விற்பனை முதலீட்டாளர்களிடையே வரவேற்பை பெறாத காரணத்தால் அத்துறை குறியீட்டெண் 0.90 சதவீதம் சரிந்தது. இதைத் தொடர்ந்து வங்கி 0.63 சதவீதமும், உலோகம் 0.59 சதவீதமும், மின்சார துறை குறியீட்டெண் 0.14 சதவீதமும் குறைந்தன.
    அதேசமயம், நுகர்வோர் சாதனங்கள் துறை குறியீட்டெண் 1.37 சதவீதமும், ரியல் எஸ்டேட் 0.41 சதவீதமும் உயர்ந்தன.
    நிறுவனங்களைப் பொருத்தவரையில், ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை 2.08 சதவீதமும், ஆக்ஸிஸ் வங்கி 1.79 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 1.47 சதவீதமும், யெஸ் வங்கி 1.20 சதவீதமும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 1.18 சதவீதமும் சரிந்தன.
    அதேசமயம், கோல் இந்தியா பங்கின் விலை 2.53 சதவீதமும், ஸன் பார்மா 1.75 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 1.53 சதவீதமும் அதிகரித்தன.
    மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 238 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 35,149 புள்ளிகளாக நிலைத்தது.
    தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 58 புள்ளிகள் குறைந்து 10,682 புள்ளிகளாக நிலைத்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai