Enable Javscript for better performance
திறன் மேம்பாட்டுக்காக ரூ.2,000 கோடி முதலீடு: முருகப்பா குழுமம்- Dinamani

சுடச்சுட

    

    திறன் மேம்பாட்டுக்காக ரூ.2,000 கோடி முதலீடு: முருகப்பா குழுமம்

    By DIN  |   Published on : 18th May 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    mmmg

    முருகப்பா குழுமம் திறன் மேம்பாட்டுக்காக அடுத்த இரு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 
    இதுகுறித்து முருகப்பா குழுமத்தின் செயல் தலைவர் எம்.எம்.முருகப்பன் கூறியதாவது: முருகப்பா குழுமத்தின் விற்றுமுதல் 2017-18 ஆம் நிதியாண்டில் 13 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.32,893 கோடியை எட்டியுள்ளது. கடந்த 2016-17 நிதியாண்டில் இது ரூ.29,206 கோடியாக காணப்பட்டது. வட்டி, வரி, தேய்மானம், கடனை செலுத்த நிதியை திரட்டுதல் ஆகியவற்றுக்கு முன்பு குழுமத்தின் வருவாய் 14 சதவீதம் வளர்ச்சியுடன் ரூ.4,663 கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.4,075 கோடியாக இருந்தது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.3,013 கோடியிலிருந்து 18 சதவீதம் வளர்ச்சியடைந்து, ரூ.3,562 கோடியாக உள்ளது. 
    ரூ.2000 கோடி முதலீடு: முருகப்பா குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் தயாரிப்பு திறன் மேம்பாட்டுக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பாஸ்போரிக் அமிலம் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.350 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. ரயில்வேயில் வேகன் பிரிவில் குழாய் தயாரிப்பில் ஈடுபடவும், ரஷியாவில் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai